நான்காவது வரவு செலவுத்திட்டம் தயார் – நிதியமைச்சு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் நான்காவது வரவு செலவுத்திட்டத்தை நவம்பர் மாதம் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க போவதாக சுதந்திர முன்னணியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 2009 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தை நிதியமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பாரென மேலும் அவர் தெரிவித்தார்.

மஹிந்த சிந்தனையின் கீழ் தயாரிக்கப்பட்ட நான்காவது வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தினத்திலிருந்து விவாதம் நிறைவடையும் வரை ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply