புலமைபரிசில் பரீட்சைக்கு ‘சுனாமி பேபி’ அபிலாஷ் தயாராகிறான்

2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தை யடுத்து உலகெங்கும் பிரபல்யம் பெற்றிருந்த அபிலாஷ் என்ற குழந்தை இன்று பத்து வயது சிறுவனாக பாடசாலையில் கற்கிறான். பாண்டிருப்பைச் சேர்ந்த இக்குழந்தை சுனாமியையடுத்து சர்ச்சைக்கும் பரபரப்புக்கும் உள்ளாகியிருந்தது.சுனாமி பேரலைகள் பாண்டிருப்பைத் தாக்கிய போது அபிலாஷ் என்ற இக்குழந்தை பிறந்து சில மாதங்களே ஆகியிருந்தன. சுனாமி அலையானது இக்குழந்தையையும் அள்ளிச் சென்றிருந்தது. பெற்றோர் இக்குழந்தையைத் தேடியலைந்து தங்களது நம்பிக்கையைக் கைவிட்டிருந்த வேளையில் ஒன்றரை நாட்களின் பின்னர் அபிலாஷ் எங்கோ ஓரிடத்தில் சேறு படித்த நிலையில் மீட்கப்பட்டான்.

அபிலாஷ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர பராமரிப்புக்கு உட்படுத்தப்பட்ட போதே சர்ச்சையும் உருவானது. ஒன்பது தாய்மார் அபிலாஷ¤க்கு உரிமை கோரினர். இதனையடுத்து இவ்விடயம் நீதிமன்றத்துக்குச் சென்றது. டி.என்.ஏ. பரிசோதனைக்குப் பின்னர் உண்மையான பெற்றோரிடம் அவன் ஒப்படைக்கப்பட்டான். அத்துடன் அவன் உலகப் பிரபல்யம் பெற்றான்.

இச் சர்ச்சை காரணமாக ‘சுனாமி பேபி’ என அழைக்கப்பட்ட இக்குழந்தைக் கும் பெற்றோருக்கும் அமெரிக்கா சென்று வரும் வாய்ப்பும் கிட்டியது. அமெரிக்க தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் அவன் பிரபல்யம் பெற்றான். தற்போது 10 வது சிறுவனாக உள்ள அபிலாஷ் அடுத்த வருடத்தில் தரம் ௫ புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ளான்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply