அரசாங்கத்துடன் கூட்டமைப்பு இணையாது விடின் வடக்கு மாகாண சபையை கலைக்க வேண்டும் : தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம்

தமிழ் மக்­க­ளுக்கு கூட்­ட­மைப்­புத்தான் முக்­கி­ய­மென்றால் அர­சாங்­கத்தை நாடவேண்டாம். சம்­பந்­த­னி­டமும் விக்­கி­னேஸ்­வ­ர­னி­ட­முமே அனைத்து உத­வி­க­ளையும் பெற்­றுக்­கொள்­ளட்டும் என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் தெரி­வித்­துள்­ளது. அர­சாங்­கத்­துடன் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இணைந்து செயற்­படா விட்டால் வட மாகாண சபை­யினை கலைப்­பதே ஒரே வழி முறை­யாகும். ஜனா­தி­பதி இதை செய்ய வேண்டும் எனவும் அவ் இயக்கம் தெரி­வித்­துள்­ளது.இது தொடர்­பாக தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலைவர் குண­தாச அம­ர­சே­கர கருத் துத் தெரி­விக்­கையில்,

யுத்த கால கட்­டத்தின் போதும் யுத்­தத்­திற்குப் பின்­னரும் அர­சாங்­கமே தமிழ் மக்­களைப் பாது­காத்து வரு­கின்­றது. இறுதிக் கட்ட யுத்­தத்தின் போது வடக்கில் இருந்த தமிழ் மக்­களை இரா­ணு­வத்­தி­னரும் அர­சாங்­க­முமே காப்­பாற்­றி­யது. அந்த நேரத்தில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் என்ன செய்­தார்கள்?

விடு­தலைப் புலி­களை ஆத­ரித்து வடக்கில் உள்ள அப்­பாவித் தமி­ழர்­களை கொலை செய்­த­மைக்­காக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்­களை கைது செய்ய வேண்டும். அதேபோல் இலங்கை அர­சாங்கம் யுத்தக் குற்­றங்­க­ளையும் மனித உரிமை மீறல்­க­ளையும் செய்­வ­தாக சர்­வ­தேச நாடுகள் குற்றம் சுமத்­து­கின்­றன. முதலில் சம்­பந்தன், மாவை போன்­றோரே மனித உரிமை மீறல்­களை செய்­தனர். அவர்­க­ளையே மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­விடம் ஒப்­ப­டைக்க வேண்டும்.

அன்று தீவி­ர­வா­தத்தில் ஈடு­பட்டு விட்டு இன்று அர­சியல் சாயம் பூசிக்­கொண்டு அப்­பாவி மக்­களை ஏமாற்றிக் கொண்­டி­ருக்­கின்­றனர். இதை தமிழ் மக்­களும் நம்பி ஏமா­று­வது மட்­டுமே மிச்­ச­மாக உள்­ளது.

தமிழ் மக்­க­ளுக்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தான் முக்­கி­ய­மென்றால் அவர்­களின் வழியில் போரா­டித்தான் வாழ வேண்­டு­மென்றால் தமி­ழர்கள் அர­சாங்­கத்தின் உத­வி­களை எதிர்­பார்க்கக் கூடாது. சம்­பந்தன் விக்­கி­னேஸ்­வ­ர­னி­டமே தமி­ழர்கள் உத­வி­களை பெற்றுக் கொள்ள வேண்டும்.

அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­பட கூட்­ட­மைப்­பி­ன­ருக்கோ வட மாகாண சபைக்கோ விருப்­ப­மில்­லா­விடின் அர­சாங்­கத்­துடன் கூட்­ட­மைப்­பினர் ஒத்துப் போகா­விடின் அர­சாங்கம் உட­ன­டி­யாக வட மாகாண சபை­யினை கலைக்க வேண்டும். ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­க­ளைக்­கொண்டு வட மாகாண சபை­யி­னைக்­க­லைத்து இரா­ணுவ பாதுகாப்பின் கீழ் வடக்கினை கொண்டு வர வேண்டும்.

இராணுவத்தினரை வட மாகாணத்தில் இருந்து அகற்றினால் மீண்டும் வடக்கில் தீவிரவாதம் உருவாக்கப்படும் என்பதை ஜனாதிபதி மறந்து விடக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply