சவுதி அரேபியாவில் பின்லேடன் மருமகனுக்கு குடியுரிமை மறுப்பு

சர்வதேச நாடுகளை மிரட்டி வந்த தீவிரவாதி பின்லேடன், அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவராக இருந்தார். பாகிஸ்தான் அயோதாபாத்தில் சொகுசு பங்களாவில் பதுங்கியிருந்த அவரை அமெரிக்காவின் நேவி சீல் என்ற அதிரடிப்படை சுட்டுக்கொன்றது. இவரது மருமகன் சுலைமான் அபு காயித்.இவர் அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளராக இருந்தார். இவருக்கு குவைத் அரசு குடியுரிமை வழங்கியிருந்தது.

கடந்த 2001–ம் ஆண்டு செப்டம்பர் 11–ந்தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கானவர்களை அல்கொய்தா தீவிரவாதிகள் கொன்றனர். அதைத்தொடர்ந்து சுலைமான் அபுகாயித்தின் குடியரிமையை குவைத் அரசு ரத்து செய்தது.

இதை எதிர்த்து சுலைமான் அபு காயித் குவைத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவரது மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. மேலும், அவருக்கு குடியுரிமை வழங்க முடியாது என மறுத்துவிட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply