ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்­தா­விட்டால் பொரு­ளா­தா­ரத்­த­டையை தவிர்க்­க­மு­டி­யா­தி­ருக்கும் :திஸ்ஸ வி­தா­ரண

2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனி­வாவில் நடை­பெ­ற­வுள்ள ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை கூட்­டத்­தொ­டரில் இலங்­கையின் மனித உரி­மைகள் விவ­காரம் தொடர்பில் ஆரா­யப்­ப­ட­வி­ருக்­கின்ற நிலையில் அதற்கு முன்­ப­தாக நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழு­வினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள பரிந்­து­ரை­களை அர­சாங்கம் உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். தவறும் பட்­சத்தில் இலங்­கைக்கு எதி­ராக மேற்­கு­லக நாடு­களின் பொரு­ளா­தார தடையை எதிர்­கொண்­டே­யாக வேண்டும் என லங்கா சம­ச­மாஜ கட்­சியின் செய­லா­ளரும் .சிரேஷ்ட அமைச்­ச­ரு­மான திஸ்ஸ வி­தா­ரண தெரி­வித்தார்.கட்­சியின் 78ஆவது வரு­டாந்த கூட்டம் ருவான்­வெல்ல என்.என்.பெரேரா கேட்போர் கூடத்தில் இடம்­பெற்ற போது அதில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனை தெரி­வித்தார்.

அமைச்சர் திஸ்ஸ வி­தா­ரண மேலும் கூறு­கையில்

அடுத்த வரு­டத்தில் இடம்­பெ­ற­வி­ருக்­கின்ற சர்­வ­தேச மனித உரி­மைகள் கூட்­டத்­தொ­ட­ருக்கு முன்­ப­தாக அர­சாங்கம் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­மே­யானால் பேர­வையின் உறுப்பு நாடு­க­ளது ஆத­ரவு எமக்கு கிடைக்கும் என்­பதில் ஐயப்­ப­டத்­தே­வை­யில்லை.

ஏனெனில் இக்­கூட்­டத்­தொ­டரில் இலங்­கையின் மனித உரிமை விவ­காரம் தொடர்பில் ஆரா­யப்­ப­ட­வுள்­ள­துடன் கேள்­வி­களும் எழுப்­பப்­ப­ட­வுள்­ளன. இதற்கு நாம் முகங்­கொ­டுக்க வேண்­டி­யுள்­ளது ஆகவே இதற்கு முன்­ப­தாக அர­சாங்கம் இதனை செய்ய வேண்டும். ஏனெனில் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் தவறும் பட்­சத்தில் எமது நாட்டின் மீதான மேற்­கு­லக நாடு­களின் பொரு­ளா­தார தடையை தவிர்க்க முடி­யா­தி­ருக்கும்.

இலங்­கையின் மனித உரி­மைகள் குறித்து பேசு­கின்ற பிரித்­தா­னியா 1940 காலப்­ப­கு­தி­களில் பாரிய மனித உரிமை மீறல்­களில் ஈடு­பட்­டி­ருக்­கி­றது. ஆகவே பிரித்­தா­னியா தொடர்பில் நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு மேற்­கு­லக நாடுகள் முன்­வ­ருமா என்­பதே பிர­தான கேள்­வி­யாக இருக்­கின்­றது.

இப்­படி இருக்கும் போது எமது நாட்டின் மனித உரிமை குறித்து பிரித்­தா­னியா கேள்வி எழுப்­பு­வது எந்த விதத்தில் நியா­ய­மா­னது என தெரி­யா­துள்­ளது. அமெ­ரிக்­காவும் பிரித்­தா­னி­யாவும் இணைந்து ஈராக்கில் மேற்­கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எந்­த­வொரு சர்­வ­தேச நாடும் கேள்­வி­யெ­ழுப்­பு­வ­தா­க­வில்லை. இதனால் அவை சிறிய நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தி வரு­கின்­றன. இது கண்­டிக்­கப்­பட வேண்டிய விடயமாகும்.

அமெரிக்காவின் தாளத்திற்கு ஏற்ற வகையில் ஐக்கிய தேசிய கட்சி செயற் பட்டு வருகின்றது. இந்நாட்டில் ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்திவிட வேண்டுமென்பதே அமெரிக்காவின் நோக்கமாகும் இருப்பினும் இடதுசாரிகளாகிய நாம் அதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply