ரஷ்ய நகரில் மீண்டும் குண்டுத் தாக்குதல்,குறைந்தது 12 பேர் பலி
ரஷ்ய நகரான வொல்கோக்ராடில் மின்சார பஸ் ஒன்றின் மீது நடந்த குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்றில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ட்ராலிபஸ் என்றழைக்கப்படும் இந்த மின்சார பஸ் ஒரு ஜனசந்தடிமிக்க பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்ற போது இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.இந்த வெடிப்பில், இந்த பஸ் ஏறக்குறைய முழுதுமாக அழிந்தது.
நேற்றுதான் இந்த நகரின் மத்திய ரயில் நிலையத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்றில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த ட்ராலிபஸ் வெடிகுண்டுத் தாக்குதலை, ஒரு பயங்கரவாத நடவடிக்கை என்று ரஷ்ய அதிகாரிகள் வர்ணித்துள்ளனர்.விசாரணை ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் ரஷ்யாவின் கருங்கடல் பகுதி வாசத்தல நகரான சோச்சியில் மழைக்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தாக்குதல்கள் இரண்டுமே, பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகப்படுத்தியுள்ளன.
இந்த மழைக்கால ஒலிம்பிக்ஸ் நடக்கும் இடம் ரஷ்யாவின் கொந்தளிப்பான, வட காகசஸ் பகுதியில் அமைந்திருக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply