இலங்கை பெளத்த நாடாக இருந்தாலும் தமிழ் மொழியிலான தேசிய கீதத்தை தடை செய்ய முடியாது : வாசுதேவ
இனங்களுக்கிடையே ஒற்றுமையை பிரதிபலிக்கும் ஒரேயொரு விடயம் தேசிய கீதம் மட்டுமே. எந்த மொழியில் தேசிய கீதத்தினை இசைத்தாலும் ஒரே அர்த்தத்தினையே வெளிப்படுத்துகின்றது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கை சிங்கள, பெளத்த நாடாக இருந்தாலும் தமிழ் மொழியிலான தேசிய கீதத்தினை தடை செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு நேற்று இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத்தெரிவிக்கையில்,
இனங்களுக்கிடையில் பிரிவினைகளை தவிர்த்து அனைவரையும் ஒன்றுபடுத்தும் ஒரே வழிமுறை தேசிய கீதம் மட்டுமே. ஒரு விழாவில் ஒரே சந்தர்ப்பத்தில் இரு மொழிகளில் தேசிய கீதத்தினை இசைக்க முடியாது. ஆனால் மொழி பெயர்ப்பு செயற்றிட்டங்களை உபயோகிக்க முடியும். சிங்களத்தில் தேசிய கீதத்தினை இசைப்பதில் தமிழ் மக்களுக்கு சிக்கல்தான் இருக்கின்றது.
அதனால் தான் தமிழிலில் பாடுகின்றனர். தேசிய கீதத்தினை எந்த மொழியில் பாடினாலும் அது ஒரே அர்த்தத்தினை வெளிப்படுத்துகின்றது. இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் இலங்கை சிங்கள பெளத்த நாடென்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். இங்கு பெளத்த கலாசாரங்களுக்கும் மதவிடயங்களுக்கும் முன்னுரிமை இருக்கின்றது. ஆனால் ஏனைய மதங்களும் இனத்தவர்களும் அடக்கப்பட வேண்டுமென எவரும் குறிப்பிடமுடியாது.
இங்கு பெளத்த சிங்களவர்களுக்கு எந்தெந்த உரிமைகள் வழங்கப்படுகின்றதோ அவை அனைத்தும் தமிழ் முஸ்லிம் இனத்தவர்களுக்கும் வழங்கப்படல் வேண்டும். இங்கு எப்போதும் அடக்கு முறை அரசியலுக்கு இடமில்லை.
பெளத்த நாடாக இருப்பதனால் தமிழ்மொழி மூலமான தேசிய கீதம் இசைக்கக்கூடாதென்பதில்லை.
தமிழ் மொழியிலான தேசிய கீதத்தினை இசைப்பதை எவராலும் தடை செய்ய முடியாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அரசா ங்கத்தில் இவ்வாறான மோசமான செயற் பாடுகள் இடம்பெறாது எனவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply