ஒரே நாட்டுக்குள் இரண்டு ஆட்சி நடத்தும் கூட்டமைப்பின் திட்டத்திற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்
சமாதானம் என்ற வார்த்தை கேட்பதற்கு நன்றாக இருப்பினும், நடைமுறையில் சாத்தியப்படாததே. முப்பது வருட காலமாகப் பெறமுடியாத சமாதானத்தை முன்று ஆண்டுகளில் பெறுவதென்பது கடினமான விடயம் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மேல் மாகாண அமைச்சர் உதய கம் மன்வில தெரிவித்துள்ளார்.மேலும், கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி தற்போது இலங்கையில் இருக்கும் சமாதானத்தையும் பிளவுபடுத்திவிடக் கூடாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹெல உறுமய கட்சியினால் நேற்று கொழும்பில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
அரசாங்கத்துடன் இணைந்து உரிய தீர்வினை பெற்றுக்கொள்வதே சிறந்த வழி. அதனை விடுத்து, சர்வதேச ரீதியில் அழுத்தங்களை ஏற்படுத்தி நாட்டில் சிக்கல்களை ஏற்படுத்துவதனால் இலங்கைக்குள் முழுமையான இனப்பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாது.
சமாதானம் என்று பேசுவோர் அதனை பெற்றுக்கொள்வதற்கான வழிமுறையினை கருத்திற்கொள்ளாததே இன்று இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம். கடந்த முப்பது ஆண்டுகளாக இலங்கையில் பேச்சுவார்த்தைகள் மூலம் பெறமுடியாத சமாதானத்தினை யுத்தத்தின் பின்னரான மூன்று ஆண்டுகளில் பெற்றுக்கொள்வதென்பது மிகவும் கடினமான விடயமே. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்தை குறை கூறிக்கொண்டு அவர்களின் தவறுகளை மூடிமறைக்க நினைக்கின்றனர்.
இத்தனை ஆண்டுகளாக தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கும் சிங்கள மற்றும் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டமைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் முக்கிய காரணமாகும். ஒரே நாட்டுக்குள் இரண்டு ஆட்சி நடத்தும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் திட்டத்திற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். அவ்வாறானதொரு நிலைமையினை சர்வதேச நாடுகளின் மூலம் கூட்டமைப்பினர் ஏற்படுத்த நினைத்தால் இன்னொரு மாவிலாறு யுத்தத்திற்கு இரு தரப்பினரும் தயாராக வேண்டும்.
மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பதனால் கூட்டமைப்பின் கொள்கைகளை மாற்றி பிரச்சினைகளை தீர்த்துவிட முடியாது. அவ்வாறு அரசாங்கம் நினைப்பதும் முட் டாள் தனமான செயற்பாடாகும். சம் ப ந்தனை பேச்சுவார்த்தைக்கு அழைத்து இலங்கையில் தற்போது இருக்கும் ஓரளவு சமாதானத்தினையும் அழித்துவிடக் கூடா தென்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply