ஜனாதிபதி – வடக்கு முதலமைச்சர் சந்தித்து பேச்சு
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இன்று வியாழக்கிழமை காலை அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. வடமாகாண சபை அமைக்கப்பட்ட பின்னர் மாகாண சபை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இந்தச் சந்திப்பில் முக்கியமாக ஆராயப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் நிர்வாக பிரச்சினைகள் தொடர்பில் முதலமைச்சர், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன், வடமாகாண சபையின் எதிர்கால நிர்வாக செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடியதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சந்திப்பின் போது ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, அமைச்சரவை செயலாளர் சுமித் அபேசிங்க, நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தர மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply