உலகின் சமாதானத்தை அச்சுறுத்தும் நாடாக அமெரிக்காவே உள்ளது : ஆய்வில் தகவல்
உலகின் சமாதானத்தை அச்சுறுத்தும் நாடாக அமெரிக்காவே உள்ளது என ஆய்வு ஒன்றின் மூலம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உலகளாவிய சுதந்திர வலையமைப்பும் கோல்அப் நிறுவனமும் இணைந்து இந்த ஆய்வை கடந்த ஆண்டு இறுதியில் நடத்தின. அதன்படி அமெரிக்காவின் நட்பு நாடுகள் உள்ளிட்ட 68 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படியே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இதேவேளை குறித்த குற்றச்சாட்டினை அமெரிக்காவின் தோழமை நாடான துருக்கி, கிரீஸ் ஆகிய நாடுகளிலும் முன்வைத்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது உலக பொலிஸ்காரனாக அமெரிக்கா நடந்து கொள்வதாக பல நாடுகளினால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆய்வின் போது 60 நாடுகளில் உள்ளவர்களில் 24 வீதத்தினர் அமெரிக்காவே உலக சமாதானத்துக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் உலக சமாதானத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இரண்டாவது நாடாக 8 வீத வாக்குகளால் பாகிஸ்தான் பதிவு பெற்றுள்ளது. அதேபோல் சீனா 6 வீத வாக்குகளுடன் உலக சமாதான அச்சுறுத்தலுக்கான மூன்றாவது நாடாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆப்கானிஸ்தான், ஈரான், இஸ்ரேல், வடகொரியா என்பன உலக சமாதான அச்சுறுத்தல் நாடுகளாக காட்டப்பட்டுள்ளன. இதேவேளை, மத்திய கிழக்கு மற்றும் வடஆபிரிக்க நாடுகளிலேயே அமெரிக்கா அச்சுறுத்தல் நாடாக இருப்பதாக பெருமளவு மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இலத்தீன் அமெரிக்க நாடுகளும் அமெரிக்காவை பயங்கரமான நாடாக சுட்டிக்காட்டியுள்ளன. இறுதியாக அமெரிக்காவின் 70 வீதமான மக்கள், தமது நாடு, 2014ம் ஆண்டில் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கான தகுதியை கொண்டிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளதாக அந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்படட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply