இலங்கை தமிழர்களின் பாதுகாப்பிற்கு பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளோம் :மன்மோகன் சிங்

இலங்கை தமிழர்களின் பாதுகாப்பிற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இன்று டில்லியின் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தேவ்யானி பிரச்சினையில் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில், இலங்கையில் தமிழர்கள் அல்லல்படுவது குறித்து உங்கள் அரசு பாரபட்சமாக நடந்து கொள்வது ஏன்? என செய்தியாளர் ஒருவர் பிரதமரிடம் கேள்வி கேட்டார்.அதற்கு பதில் அளித்த பிரதமர் மன்மோகன்சிங், ´அது உண்மையல்ல. இலங்கை தமிழர்களின் பாதுகாப்பிற்கு நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். பல முறை, இலங்கை அரசுடன் விவாதம் நடத்தி உள்ளோம். இலங்கையின் வட மாகாணத்தில் தமிழர்கள் ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,´ என்றார்.

அடுத்து, ´தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை,´ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ´இரு நாட்டு மீனவர்களும் கலந்து கொள்ளும் வகையிலான பேச்சுவார்த்தையே இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,´ என்று மன்மோகன் சிங் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply