ஐ.நா மனித உரிமைப் பேரவை அழுத்தங்களை எதிர்நோக்கத் தயார் : கெஹலிய ரம்புக்வெல்ல
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அழுத்தங்கஇ எதிர்நோக்கத் தயார் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் எதிர்நோக்கக் கூடிய அழுத்தங்களை முறியடிக்கத் தேவையான ஆயத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தனிமைப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறும் காலப்பகுதியில் பிரி;த்தானியா மற்றும் கனடாவில் தேர்தல் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய வாழ் 150,000 தமிழ் மக்களின் ஆதரவினை பிரதமர் கமரூன் திரட்டும் முனைப்புக்களில் ஈடுபடுவார் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். கனடாவிலும் 250000 தமிழ் மக்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply