முல்லைத்தீவில் கடல் கொந்தளிப்பு – கிராமங்களுக்குள் நீர்!: மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை வரையான கரையோர பிரதேசங்களில், 100 மீற்றருக்குள்ளான பகுதியில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.திருகோணமலையில் இருந்து கிழக்கு திசையில் 250 கிலோமீற்றர் தொலைவில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள உயர் அமுக்க நிலையினால், மன்னார் முதல் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பகுதி மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு வரையான கடற்பகுதியில் மிகப்பெரிய அலைகள் ஏற்படும் அச்சம் காணப்படுகிறது. இந்த அலைகள் சுமார் 3 மீற்றர் உயரம் வரையில் காணப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
எனவே இந்த பகுதியில் 100 மீற்றருக்கு உட்பட்ட கரையோரப் பகுதிகளில் பொது மக்கள் நடமாட வேண்டாம் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது. அத்துடன் வடக்கு கடற்பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் மீனவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு கடலில் 3 மீற்றர் அலை
திருகோணமலையில் இருந்து கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள வளிமண்டல உயர் அமுக்க நிலை, யாழ்ப்பாணத்துக்கு அருகில் நகரும் என்ற தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக வடக்கு கடற்பரப்பில் மணிக்கு 100 கிலோமீற்றர் என்ற கடும் வேகத்தில் காற்று வீசும் என்றும், சுமார் 200 மில்லி மீற்றர் அளவுக்கு மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் மன்னார் முதல் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பகுதி கடும் கொந்தளிப்புடன் காணப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த பகுதியில் சில சமயங்களில் 3 மீற்றர் உயரத்துக்கு அலைகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply