அமெரிக்காவை மிரட்டும் பனிச் சுழல்காற்று: விமான போக்குவரத்து ரத்து
கடந்த சில நாட்களாக வட அமெரிக்காவை துருவ பனி சுழல்காற்று தாக்கி வருகிறது. இதனால் அங்கு கடும் பனி மழை கொட்டுகிறது. இதனால் அமெரிக்காவின் பல பகுதிகள் பனி மூடிக்கிடக்கின்றன. வீட்டை விட்டு பொது மக்கள் யாரும் வெளியே வரமுடியவில்லை. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் வட கிழக்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 2 அடி உயரத்துக்கு பனி மூடிக்கிடக்கிறது. இந்த வார இறுதி வரை 3,700 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் மைனஸ் 51 டிகிரி அளவுக்கு குளிர் வாட்டுகிறது.
சிகாகோ, இல்லினாய்ஸ், மின்னாபாலிஸ் உள்ளிட்ட நகரங்களிலும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அங்கும் பள்ளிகள், அலுவலகங்கள் திறக்கப் படவில்லை. அமெரிக்காவில் பனிப்புயலுக்கு இதுவரை 16 பேர் பலியாகி உள்ளனர்.
கனடாவிலும் கடும் பனி சுழல்காற்று வீசுகிறது. இதனால் அங்கும் பனி கொட்டுகிறது. அங்கு மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் அளவுக்கு தட்ப வெப்ப நிலை உள்ளது.
தலைநகர் டொரண்டோவில் மைனஸ் 38 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. இதனால் அங்கும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பொது மக்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply