இன்று முதல் வாகனங்களில் VIP ,VVIP எனும் முத்திரைகளுக்கு தடை
இன்று முதல் வாகனங்களில் VIP மற்றும் VVIP என பெயர் பொறிக்கப்பட்டுவது தடை செய்யப்படுகின்றது.வாகனங்களில் மேற்படி முத்திரைகளை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு போக்குவரத்து பொலீஸ் பணிப்பாளர் நாயகம் அமரசிரி சேனாரத்ன பொலீஸாருக்கு அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.VIP அல்லது VVIP எனும் போர்வையில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக பொலீஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அத்துடன் பயனிக்கும் வாகணத்தின் சாரதியையோ அல்லது பயனிகளையோ அடையாளங்காண முடியாத வகையில் வாகணங்களின் முற்பக்கத்தில் உரு மறைப்புக் கண்ணாடிகளை பொருத்துதலும் சட்ட விரோதம் என பொலீஸார் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply