தாழமுக்கம் அரபிக் கடலுக்குள் நகர்வு அபாயம் நீங்கியது
வடக்கில் முல்லைத்தீவு, கிளிநொச்சியை ஊடறுத்து மெதுவாக நகர்ந்த தாழமுக்க மையம் நேற்று புத்தளத்தில் நிலை கொண்டிருந்ததுடன் அங்கிருந்து மேற்காக இந்த தாழமுக்கம் இன்றைய தினம் அரபிக் கடலுக்குள் செல்லுமென வானிலை அவதான நிலைய அதிகாரி சூரியகுமாரன் தெரிவித்தார்.மேற்படி தாழமுக்கம் இன்றைய தினம் அராபிய கடலுக்குள் நகர்வ தோடு இலங்கை மீதான அனர்த்த அச்சுறுத்தல் முற்றாக நீங்கும் எனவும் அவர் தெரிவித்தார். நேற்று முன்தினம் முல்லைத்தீவில் நிலை கொண்டிருந்த தாழமுக்க மையம் முல்லைத்தீவிலிருந்து கிளிநொச்சியூடாக மன்னார், புத்தளம் நோக்கி மெதுவாக நகர்ந்தது. மிக மெதுவாகவே நகரும் இந்த தாழமுக்க மையம் இன்று அராபியக் கடல் நோக்கி நகரும் எனவும் அவர் தெரிவித்தார். இதனால் நேற்றைய தினம் வட பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளிலும் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்த காலநிலை இன்றும் தொடரும் என தெரிவித்த அவர் மன்னார் வளைகுடா முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட கடல் பிரதேசங்களில் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, மேற்படி தாழமுக்கத்தின் பாதிப்பாக நாட்டில் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யும் எனவும் மேல் மாகாணத்தில் இடைக்கிடை மழை பெய்யலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்தது. அத்துடன் மாலை மற்றும் இரவு நேரங்களில் மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் அந்நிலையம் தெரிவித்தது.
வடக்கில் முல்லைத்தீவுக்கு வட கிழக்கில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம் வடக்கின் யாழ்ப்பாணம், முல்லைத்தீ வினூடாக நகர்ந்ததால் அப்பகுதியின் சில பிரதேசங்களில் பாதிப்புகள் ஏற்பட்டன. சில குடும்பங்கள் பாதிக்கப் பட்டதுடன் மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல முடியாத நிலையும் தொடர்ந்தது. இன்றுடன் இந்நிலை சுமுகமாகும் என எதிர்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply