“ஸ்டீபன் ரெப் அல்ல ஒபாமா வந்தாலும் எம்மை எப்போதும் அசைக்க முடியாது’
அமெரிக்காவுக்கு எதிராக உலகில் அணி திரண்டுள்ள 59 நாடுகளின் அணியில் இலங்கையும் இணைந்து அமெரிக்க எதிர்ப்பிற்கு மேலும் வலுச்சேர்க்க வேண்டும் போராட வேண்டும் என்று வலியுறுத்தும் தேசிய அமைப்புக்களின் ஒன்றியம், ஸ்டீபன் ரெப் அல்ல அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வந்தாலும் எம்மை அசைக்க முடியாது என்றும் தெரிவித்தது.இலங்கை தொடர்பான அமெரிக்காவினதும் இங்கு வந்துள்ள அந்நாட்டு பிரதிநிதி ஸ்டீபன் ரெப்பின் நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்பாக நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய இவ் ஒன்றியத்தின் முக்கியஸ்தரான பெங்கமுகவே நாலக தேரர் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்காகவும் தகவல்களை பெற்றுக் கொள்வதற்குமே இங்கு வந்துள்ளதாக தெரிவித்த அமெரிக்காவின் விசேட பிரதிநிதி ஸ்டீபன் ரெப்.
இங்கு வந்த பின்னர் இதற்கு மாறாக தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா.வின் மனித உரிமை ஆணைக்குழு மாநாட்டில் எமது நாட்டுக்கு எதிராக பிரேரணை சமர்ப்பிப்பதற்கான சாட்சியங்களை திரட்டுகிறார். இந்த ரெப் தான் ருவண்டாவிலும் மனித உரிமைகளை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு கொலைகாரர்களை பாதுகாத்தவர். இங்கு மனித உரிமைகளை பாதுகாக்க அதனை மீறும் அமெரிக்காவின் உதவி எமக்கு தேவையில்லை.
உலகில் பல நாடுகளில் பலவந்தமாக புகுந்து பிரச்சினைகளை தோற்றுவித்து சமாதானத்தை சீர்குலைக்கின்றது. எனவே அமெரிக்காவுக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும் என்ற கொள்கையில் உலகின் 59 நாடுகள் ஓரணியில் இணைந்துள்ளன.
அவ் அணியில் நாமும் இணைய வேண்டும் அமெரிக்காவுக்கு எதிராக போராட வேண்டும். விடுதலைப் புலிகளினதும் புலம்பெயர் தமிழர்களினதும் பிரிவினைவாதத்தை வெற்றி பெறச் செய்வதற்கான நடவடிக்கைகளையே அமெரிக்கா முன்னெடுக்கின்றது.
எமது நாட்டுக்கு எதிராக அமெரிக்கா செய்யும் சதிகளுக்கு தெய்வம் தண்டனை வழங்கும். அந்நாடு அழிந்து போகும் காலம் வெகு தொலைவில் இல்லையென்றும் பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்தார்.
டாக்டர் குணதாச அமரசேகர ஏற்பாட்டாளர்
ரெப்பினதும் அமெரிக்காவினதும் நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டு அரசாங்கம் அமைதியாக இருப்பதை பார்க்கும் போது இதனை ஆதரிப்பதாகவே எமக்கு தோன்றுகிறது.
எதுவிதமான எதிர்ப்பையும் வெளியிடாது வெளிநாட்டலுவல்கள் அமைச்சும் மௌனம் காக்கிறது.
தேசப்பற்றுள்ள கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாகும். ஆனால் இன்று அதிலுள்ள அமைச்சர்களும் ஊமைகளாகி விட்டனர். ஏன் என்று புரியவில்லை.
இம் மௌனம் கலைய வேண்டும் ரெப்பின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றார்.
மொஹமட் முஸம்மில்
அமெரிக்காவின் ரெப் அல்ல ஜனாதிபதி ஒபாமா வந்தாலும் எம்மை அசைக்க முடியாது. எமது மக்கள் ஒன்று சேர்ந்து அமெரிக்காவுக்கு எதிராக போராடுவார்கள். அமெரிக்காவை தோல்வியடையச் செய்வார்கள். ஜனாதிபதியை யுத்தக் குற்றவாளியாக்குவதே இவர்களின் திட்டமாகும் என்றார்.
டாக்டர் வசந்த பண்டார
தேர்தல்களை நடத்தி நாட்டு மக்களை திசை திருப்பாது நாட்டுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளை தெளிவுபடுத்தி அமெரிக்காவுக்கு எதிராக போராட்டங்களுக்கு மக்களை தயார் படுத்த அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply