பாகிஸ்தானில் தற்கொலை தீவிரவாதியை தடுத்த 14 வயது பள்ளி சிறுவன்: குண்டு வெடித்ததில் 2 பேரும் பலி
பாகிஸ்தானில் கைபர்– பக்துன்கவா மாகாணம் தீவிரவாதிகள் ஆதிக்கத்தில் உள்ளது. இங்கு தற்கொலை தாக்குதல்கள் மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் தீவிரவாதிகள் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில், ஒரு பள்ளியில் தற்கொலை தாக்குதல் நடத்த முயன்ற ஒரு தீவிரவாதியை மாணவன் ஒருவன் தடுத்து நிறுத்தி தனது உயிரை தியாகம் செய்தான். அதன் மூலம் அந்த பள்ளியில் படிக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் உயிரை காப்பாற்றினான்.அவனது பெயர் அய்த் ஜாஷ் ஹசன் (14). இவன் கைபர்–பக்துன்கவா மாகாணத்தின் ஹன்சு மாவட்டத்தில் இப்ராகிம் ஷாயில் என்ற இடத்தை சேர்ந்தவன். அவன் அங்குள்ள அரசு பள்ளியில் 9–வது வகுப்பு படித்தான்.
நேற்று அவன் பள்ளி வாசலில் நின்று கொண்டிருந்தான். அப்போது சந்தேகப்படும் நிலையில் ஒரு மர்ம நபர் அங்கு வந்தான்.
அவன் தற்கொலை தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதி என்பதை அறிந்த ஹசன் பரபரப்பானான். அவன் பள்ளிக்குள் நுழைந்து விடாதபடி ஓடோடிச் சென்று ‘கேட்’ வாசலில் அவனை தடுத்து நிறுத்தினான்.
அதற்குள் தற்கொலை படை தீவிரவாதி தான் இடுப்பில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தான்.
அதில், தீவிரவாதியுடன் சேர்ந்து மாணவன் ஹசனும் உடல் சிதறி பலியானான். இதன் மூலம் உடன் படிக்கும் ஏராளமான மாணவர்களின் உயிரை காப்பாற்றினான்.
அவனது தைரியத்தையும், தியாகத்தையும் கிராம மக்கள் பாராட்டினார்கள். தற்போது இவன் பாகிஸ்தானின் ‘ஹீரோ’ என புகழப்படுகிறான்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply