பிரித்தானியாவில் இலங்கைத்தமிழ் பெண் தனது 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார்
பிரித்தானியாவில் இலங்கைத்தமிழ் பெண் ஒருவர் 7 மாதமும் 5 வயதும் நிரம்பிய தனது குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார். வடமேற்கு லண்டனில் வசித்து வந்த ஜெயவாணி வாகீஸ்வரன் என்ற 33 வயதுடைய இளம் தாயே நேற்று 09.01.2014 வியாழக்கிழமை தனது 7 மாதமும் 5 வயதும் நிரம்பிய இரண்டு ஆண்குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார்.
நேற்று மாலை தகவலறிந்து அவர்கள் குடியிருந்த வீட்டுக்கு சென்ற காவல்துறையினர் மூவரின் சடலங்களையும் மீட்டுள்ளனர்;.குடும்பத் தகராறே இந்த கொலை மற்றும் தற்கொலைக்கு காரணம் என்று நம்புவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களது அயல்விட்டில் குடியிருந்த குடியிருப்பாளர் இவர்களது வீட்டில் அடிக்கடி சண்டைபிடிக்கும் சத்தம் கேட்பதாக காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நடந்த போது குடும்பத்தலைவரான சக்திவேல் வாகீஸ்வரன் வீட்டில் இருக்கவில்லை எனத் தெரிவிக்ப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஸ்கொட்லன்ட் யார்ட் காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply