தெற்கு சூடானில் தொடரும் கலவரம்: 1000 பேர் பலி
தெற்கு சூடான் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது என ஐ.நா அறிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா துணை செய்தி தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் கூறுகையில், தெற்கு சூடான் முன்னாள் துணை ஜனாதிபதி ரீக் மாச்சர் ஆதரவு கிளர்ச்சிப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் வளம் மிக்க பென்டியூ நகரத்தின் மீதுதான் முழு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.இப்பகுதியில் கடந்த 10ம் திகதி காலையில் குண்டு வெடித்து நேர்ந்த மோதலில் 8,000 க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேறி ஐ.நா முகாமில் தஞ்சமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஐ.நா. அமைதிப்படை தலைவர் ஹெர்வ் லாட்சூஸ் கூறுகையில், தெற்கு சூடான் கலவரத்தால் 1 லட்சம் பேர் வரை உகாண்டாவிலும், 60,000-க்கும் மேற்பட்டோர் ஐ.நா. முகாம்களிலும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கென்யா மற்றும் எத்தியோப்பியாவிலும் தஞ்சமடைந்துள்ளனர்.
மொத்தத்தில் இரண்டரை லட்சம் பேருக்கு மேல் புலம்பெயர்ந்து விட்டனர் என்றும், கடந்த டிசம்பர் 15ம் திகதி கலவரம் மூண்டதில் இருந்து இதுவரை 1,000 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தெற்கு சூடானுக்கு 5,500 வீரர்களை அனுப்ப ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது, கூடுதலாக 850 வீரர்களை நேபாள அரசு அனுப்புகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply