சிரியா அமைதி பேச்சுவார்த்தையில் ஈரான் பங்கேற்குமா?

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக நடக்கும் உள்நாட்டு போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர். அதை முடிவுக்கு கொண்டு வர அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் 2-வது கட்ட பேச்சுவார்த்தை வருகிற 22-ந்தேதி சுவிட்சர்லாந்தில் உள்ள மோன்ட்ரியூஸ் நகரில் நடைபெறுகிறது.இந்த பேச்சுவார்த்தையில் ஈரான் பங்கேற்க எதிர்ப்பும், ஆதரவும் இருக்கிறது. சிரியாவுக்கு ரகசியமாக ஆயுத உதவிகளை ஈரான் அளித்து வருவதால் எதிர்ப்பு வலுக்கிறது. எனவே சிரியா விவகாரம் குறித்த பேச்சுவார்த்தையில் ஈரான் பங்கேற்காது என அமெரிக்க அதிகாரிகள் சூசகமாக தெரிவித்தனர். இருந்தபோதிலும் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி இவ்வாரம் பிரான்சு சென்று பேச்சு நடத்தும் போது இது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் ஒரு அதிகாரி கூறுகிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply