இஸ்ரேல் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷரோன் மறைவு
இஸ்ரேலின் பதினோராவது பிரதமராக கடந்த 2001௨006 ஆண்டுகளில் ஆட்சி புரிந்த முன்னாள் பிரதமர் ஏரியல் ஷரோன் மாரடைப்பின் காரணமாக நேற்று பிற்பகல் மரணமடைந்தார். இவருக்கு வயது 85.ஏரியல் ஷரோன் கடந்த 2006 ஆம் ஆண்டில் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதிருந்து தொடர்ந்து பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த அவரது உடல்நிலை கடந்த ஒன்றரை வாரமாக மெதுவாக செயலிழக்க ஆரம்பித்தது. இன்று மதியம் ஏற்பட்ட மாரடைப்பினால் இறந்தார். தன்னுடைய அன்பான குடும்பம் அருகில் இருக்கும்போது அமைதியாக மரணத்தைத் தழுவினார் என்று அவருக்கு சிகிச்சை அளித்து வந்த ஷெபா மருத்துவ மையத்தின் நிர்வாக இயக்குனர் ஷ்லோமோ நோய் தெரிவித்தார்.
கடந்த 1948 ஆம் ஆண்டு இஸ்ரேலின் சுதந்திரத்திற்காகப் போராடிய இவர், அதுமுதல் கோமாவில் பாதிக்கப்படும் வரை தொடர்ந்து இஸ்ரேலின் அரசியல் வரலாற்றில் ஈடுபட்டிருந்தார் என்று பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். 1967 மற்றும் 1973 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற யுத்தங்களில் தீர்க்கமான பிரச்சாரங்களுடன் பங்கேற்ற இவரைப் பெரும்பான்மையான இஸ்ரேலியர்கள் ஒரு போர் வீரனாகவே கருதினார்கள்.
2000ஆவது ஆண்டில் எழுந்த பாலஸ்தீனக் கிளர்ச்சியிலும், அமைதிப் பேச்சுவார்த்தைகள் முறிந்த நிலையில் ஏற்பட்ட இஸ்ரேலிய ராணுவத் தாக்குதல்களின் கொந்தளிப்பான நேரங்களிலும் ஷரோன் தலைமை தாங்கி திறமையாகச் செயல்பட்டுள்ளார். கடந்த 2001 ஆம் ஆண்டில் பிரதமர் பதவியை ஏற்ற அவர் தான் நோய்வாய்ப்பட்டு விழுவதற்கு ஒரு வருடம் முன்னர்தான் காசா பகுதியிலிருந்த இஸ்ரேலியக் குடியேற்றங்களைத் திருப்பும் முடிவை செயலாக்கினார்.
தனது ராணுவ மற்றும் அரசியல் வாழ்வில் பலவானாகத் தென்பட்டபோதும் நீண்ட வாழ்நாள் முழுவதும் அவர் சர்ச்சைகளையும் சந்தித்து வந்தார். மொத்தத்தில் அவர் நேசித்த இஸ்ரேல் நாட்டுடனே அவரது வாழ்க்கையும் பின்னிப்பிணைந்திருந்தது என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply