யுத்த இழப்பு தொடர்பான உண்மைகள் வெளிவரும் என்பதனாலேயே கூட்டமைப்பு அச்சம் : பஷில்
தொகை மதிப்பு மற் றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்ன ணியும் சில அரச சார்பற்ற நிறுவனங்களும் ஈடுபட்டுவருவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக் ஷ தெரிவித்தார்.தொகைமதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் யுத்த பாதிப்புக்கள் தொடர்பான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டவுடன் உண்மைகள் வெளிவந்துவிடும் என்பதாலேயே இவ்வாறு குறித்த திணைக்களத்தின் நம்பகத்தன்மையை சீர்குலைக்க இந்தத் தரப்பினர் முயற்சிக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் முயற்சியில் சில தரப்புக்கள் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் சில அரச சார்பற்ற நிறுவனங்களும் இவ்வாறு திணைக்களத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்துகின்றன என குறிப்பிட்டார்.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களமானது நீண்டகாலமாக நாட்டில் பல்வேறு வகையான கணக்கெடுப்புக்களை மேற்கொண்டுவருகின்றது. குறிப்பாக 10 வருடங்களுக்கு ஒருமுறை சனத்தொகை புள்ளிவிபர கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுவருகின்றது என்றார்.
மேலும் பொருளாதார விடயங்கள் தொடர்பான கணக்கெடுப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு கணக்கெடுப்புக்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் இதுவரை காலமும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வியெழுப்பாத இவர்கள் தற்போது யுத்த பாதிப்புக்கள் குறித்த கணக்கெடுப்பை மேற்கொள்ளும்போது மட்டும் அதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வியெழுப்புகின்றனர் என்றார்.
யுத்தகாலத்தில் காணாமல் போனோர் என தற்போது சில தரப்பினர் மிகப்பெரிய எண்ணிக்கைகளை கூறிவருகின்றனர். இந்நிலையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுவிட்டால் உண்மை வெளிவந்துவிடும் என்பதால் புள்ளிவிபரவியல் திணைக்களத்தை விமர்சிப்பதுடன் அதன் நம்பகதன்மையை சீர்குலைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுவருகின்றனர் என மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply