சிரியா அமைதி பேச்சுவார்த்தையில் போராளிகள் பங்கேற்கவேண்டும்: இல்லையேல் அமெரிக்கா-பிரிட்டன் நாடுகளின் உதவிகள் குறித்து மறுபரிசீலனை

சிரியாவில் கடந்த 40 ஆண்டுகளாக ஆட்சி செலுத்திவரும் ஷியா பிரிவு அதிபர் பஷர் அல் ஆசாத் குடும்பத்திற்கு எதிராக போராளிக்குழுக்கள் சண்டையிட்டு வருகின்றன. கடந்த 3 வருடங்களாக நடந்துவரும் இச்சண்டையில் ஆசாத்துக்கு ஆதரவாக ஈரான், ரஷ்யா போன்ற நாடுகள் ஆதரவு அளிக்கின்றன.அதுபோல் சிரியாவின் முக்கிய போராளிகள் குழுவிற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் ஆதரவு அளித்துவருகின்றன. இச்சண்டை தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதுவரை அங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு இருதரப்பும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதில் அதிபர் பதவி விலகும் வரை பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க போவதில்லை என்று போராளிகளின் சிரியா தேசிய சபை அறிவித்துள்ளது. இதனிடையே, அடுத்தவாரம் ஜெனிவாவில் நடைபெறும் ஜெனிவா-ஈஈ அமைதிப்பேச்சு வார்த்தையில் போராளிகள் குழு பங்கேற்க வேண்டும் என அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இப்பேச்சுவார்த்தையில் சிரியா தேசியக்கூட்டணி பங்கேற்கவில்லை என்றால் அவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று அந்நாடுகள் எச்சரித்துள்ளன. இதையடுத்து பேச்சுவார்த்தையில் பங்கேற்களாமா? வேண்டாமா? என்பது குறித்து சிரியா போராளி குழுக்கள் வரும் வெள்ளியன்று வாக்கெடுப்பு நடத்துகின்றன.

சிரியா போராளிகள் குழுவிடமும் பிளவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 3 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டுபோருக்கு இந்த ஜெனிவா பேச்சுவார்த்தையில் முடிவு கட்டப்படும் என்று நம்பப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply