இஸ்லாம் எங்களுக்கு நடுநிலைமையை வகிக்கவே கற்றுத்தந்துள்ளது :அமைச்சர் ஹக்கீம்
யுத்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்களை முஸ்லிம்கள் நடுநிலையாக இருந்து பார்க்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேசம் இலங்கைக்கு கொடுக்கும் அழுத்தத்தினால் நாட்டில் இனங்களுக்கு இடையில் சகிப்புத் தன்மை ஏற்படுவதுக்கு பாரிய தடங்கலாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.கண்டியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மீலாதுன் நபி விழாவில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம்,
போர் குற்றங்களுக்கான அமெரிக்காவின் தூதுவர் ராப் அண்மையில் இலங்கைக்கு வந்தபோது, நீதி அமைச்சர் என்ற வகையில் என்னையும் சந்தித்தார். நான் கூறியவற்றை அவர் ஏற்றுக்கொண்டார்.
ஆனால் அவர் என்னுடன் நடத்திய சந்திப்பின் போது தனது நோக்கத்தை நிறைவேற்றுவதில் அவர் உன்னிப்பாக இருந்தார்.
போர் குற்றம் தொடர்பில் சிலர் அது நடந்ததாகவும் மற்றும் சிலர் அப்படி ஒன்று நடக்கவில்லை என்றும் இரு முனைகளில் இருந்து கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆனாலும் முஸ்லிம்கள் நடுநிலையில் இருந்து இதனை பார்க்க வேண்டும். இஸ்லாம் எங்களுக்கு நடுநிலைமையை வகிக்கவே கற்றுத்தந்துள்ளது. என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply