இந்தியாவிலிருந்து திருடப்பட்ட சிலைகளைத் திரும்பக் கொடுத்தது அமெரிக்கா

கலை விநியோகஸ்தர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு கடத்தப்பட்ட பண்டைய சிற்பங்களை அமெரிக்கா இந்தியாவிற்கு திரும்பி கொடுத்துள்ளது.கடந்த ஒரு மாத காலமாக இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பதற்றமான சூழலை ஏற்படுத்திய இந்தியாவின் துணை தூதர் தேவயானியின் கைதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த துணைத் தூதர் கைதான சம்பவத்திற்கும், தொல்பொருட்கள் திரும்பி தரப்பட்ட சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா என்பதை குறித்து நியூயார்க்கில் உள்ள இந்திய தூதர் தியானேஸ்வர் முலே கருத்து தெரிவிக்க மறுத்தாலும், இந்த தொல்பொருட்கள் திரும்பி தரப்பட்டதற்காக அவர் அமெரிக்காவிற்கு நன்றி தெரிவித்ததாக செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த இரு நாடுகளுக்கு இடையேயான சிறந்த ஒத்துழைப்புதான் இந்த விலைமதிப்பற்ற தொல்பொருட்களை மீட்கவும் திரும்பி அனுப்பவும் வழிவகுத்தது என்று அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு விசாரணைகளின் நிர்வாக இணை இயக்குனர் ஜேம்ஸ் டின்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டின் கலாச்சார சொத்தை திருடுவது பொறுத்து கொள்ள முடியாத விஷயம் என்றும் அவர் கூறினார். 11ஆம் மற்றும் 12ஆம் நூற்றாண்டு காலத்தில் செய்யப்பட்ட மணற்கல் சிற்பங்கள் கலை விநியோகஸ்தர்களால் அமெரிக்காவில் விற்பனைக்கு வைக்கப்பட்டது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதில் ஒரு சிற்பம் இந்தியாவின் ஒரு கோவிலிலிருந்து திருடப்பட்டது.

.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply