இலங்கைச் சிறையிலுள்ள இந்திய மீனவர்கள் அனைவரும் இன்று முதல் விடுவிக்கப்படுவர்
இலங்கைச் சிறைகளிலுள்ள இந்திய மீனவர்கள் அனைவரும், அவர்களது படகுகளும் இன்று வியாழக்கிழமை தொடங்கி உடனடியாக விடுவிக்கப்படும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.இருநாட்டு மீனவர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக இந்தியா சென்றுள்ள இலங்கை அமைச்சர், நேற்று புதன்கிழமை இந்திய வெளியுறவு மற்றும் விவசாய அமைச்சர்களை சந்தித்துப் பேசிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.சென்னையில் இந்த மாதம் 20 ஆம் தேதி இருநாட்டு மீனவர்களிடையே நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் இலங்கை மீனவர்கள் கலந்து கொள்வார்கள் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
இந்த பயணத்துக்கு வட மாகாண கடற்தொழிலாளர்கள் இணையம் மற்றும் தேசிய மீனவர்கள் ஒத்துழைப்பு இயக்கம் ஆகியவை தெரிவித்துள்ள எதிர்ப்பை அவர் நிராகரித்தார்.
இருநாட்டு மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், இருநாடுகளுக்கும் இடையிலான கடல் வளத்தை மேம்படுத்துவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை குறித்து விவாதிப்பதற்கு ஒரு குழு அமைக்கப்படும் என்றும், இது குறித்து ஆராய ஒரு நிதியத்தை ஏற்படுத்த இந்தியா முழுமையாக பண உதவி செய்ய ஒப்புக் கொண்டுள்ளது என்றும் அவர்தெரிவித்தார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply