பொற்கோயில் சம்பவ உண்மைகளை வெளியிட பிரிட்டன் நாட்டின் சீக்கிய எம்.பி. கோரிக்கை

1984ஆம் ஆண்டு நடந்த பொற்கோயில் சம்பவம் தொடர்பான உண்மைகளை தெரிவிக்கும்படி பிரிட்டன் நாட்டின் சீக்கிய நாடாளுமன்ற உறுப்பினர், அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தினார்.தற்போது அங்கு வெளியாகியுள்ள கடிதங்களில் பொற்கோயிலில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாத தீவிரவாதிகளை வெளியேற்றுவது குறித்து அந்நாட்டு அரசிடம் ஆலோசனை வழங்குமாறு இந்தியா கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இக்கடிதத்திற்கு அப்போதைய பிரதமர் மார்கரெட் தாட்செர் ஒப்புதல் கொடுத்த பின் அங்கிருந்து வந்த சிறப்பு படை அதிகாரிகள் தீட்டிய திட்டத்தின்படி இந்திய பிரதமர் இந்திராவின் ஒப்புதலுக்குப் பின் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.ஆனால் இது குறித்து பேசிய கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி. பால் உப்பால், இவ்விவகாரத்தை அரசியலாக்குவது உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்றார். அரசு இது குறித்து விரைவாக தனது அறிக்கையை சமர்ப்பித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி அந்நாட்டு மூத்த அரசு ஊழியருக்கு பிரதமர் டேவிட் கேமரூன் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply