இலங்கையின் முதலீட்டு அபிவிருத்தி குறித்து பிரான்ஸில் மாநாடு

இலங்கையின் முதலீட்டு அபிவிருத்தி குறித்து பிரான்ஸில் வர்த்தக மாநாடு ஒன்று நடைபெறுகிறது.இன்று தொடக்கம் 20ம் திகதி வரை பிரான்ஸின் பெரிஸ் நகரில் இம்மாநாடு நடைபெறவுள்ளது.2014ம் ஆண்டு மற்றும் எதிர்கால முதலீடுகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்படவுள்ளது.இந்த மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply