தாய்லாந்தில் எதிர்க்கட்சிகள் பேரணியில் குண்டு வீச்சு: ஒருவர் பலி : 50 பேர் படுகாயம்

தாய்லாந்தில் பிரதமர் யிங்லக் ஷீனாவத்ரா பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. நேற்று தலைநகர் பாங்காக்கில் சுதீப்தவுங் சுபான் தலைமையில் மாபெரும் கண்டன பேரணி நடந்தது.அதில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்றவர்கள் பிரதமருக்கு எதிரான கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.அப்போது பேரணியாக சென்றவர்கள் மீது வெடி குண்டுகள் வீசப்பட்டன. அதில் 46 வயது மதிக்கத்தக்க ஒருவர் பலியானார். 50 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 11 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply