பாகிஸ்தானில் இன்று ராணுவ வாகனங்களின் மீது தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குதல்: 20 வீரர்கள் பலி
பாகிஸ்தானின் வசிரிஸ்தான் பகுதியில் ராணுவ வாகணங்களின் மீது தீவிரவாதிகள் இன்று வெடிகுண்டு வீசி நடத்திய கொலைவெறி தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் பலியாகினர்.பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பகுதியின் பெஷாவர் நகரில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆமண்டி சவுக் பகுதி வழியாக பண்ணு என்ற இடத்தை நோக்கி இன்று காலை ராணுவ வாகனங்களில் வீரர்கள் சென்று கொண்டிருந்தனர்.பண்ணு-மிரான்ஷ் பகுதி சந்திக்கும் ரஸ்மக் கேட் அருகே வாகனங்கள் சென்றபோது, இடைமறித்த தீவிரவாதிகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு ராணுவ வாகனம் வெடித்து தூள், தூளாக சிதறியது. வாகனத்துக்குள்ளே இருந்த 20 வீரர்கள் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்.
படுகாயமடைந்த மேலும் 25 வீரர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply