பொதுபலசேனா, சிஹல ராவய போன்ற மதத் தீவிரவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும் :விக்ரமபாகு
பள்ளிவாசல்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தி வன்முறையைத் தூண்டி வரும் பொதுபலசேனா, இராவணா பலய மற்றும் சிஹல ராவய போன்ற மதத் தீவிரவாத அமைப்புக்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கும் படி நவசம சமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த அமைப்புக்கள் அரசாங்கத்தின் ஆதரவுடனேயே இயங்கி வருகின்றன எனவும் அவர் குற்றஞ் சாட்டினார்.
ஹிக்கடுவையில் கிறிஸ்தவ ஆலயம் மீதான தாக்குதல் உட்பட பல தேவாலயங்கள் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவங்களில் ஈடுபட்டோர் மீது இதுவரை சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஹிக்கடுவை கிறிஸ்தவ தேவாலயம் மீதான தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களைக் கைது செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பொதுபலசேனா, இராவணா பலய மற்றும் சிஹல ராவய போன்ற அமைப்புக்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்க முடியாதுள்ளது. இதற்கு மேலாக காணாமல் போனோரின் உறவுகள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் நடத்திய கண்காட்சியையும் கவனயீர்ப்பு போராட்டத்தையும் பொதுபலசேனா அமைப்பு குழப்பும் வகையில் நடந்து கொண்டது. இது குறித்து பொலிஸார் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலை நீடிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply