உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதால் முஸ்லிம்கள் ஐ.தே.க.வுக்கே வாக்களிப்பர் : கபீர் ஹாசிம்

முஸ்லிம் சமூ­கத்­தி­னரின் உரி­மைகள் மறுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதனால் எதிர்­வரும் மேல் மாகாண சபை தேர்லில் முஸ்­லிம்கள் பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய தேசிய கட்­சிக்கே வாக்­க­ளிப்பர். ஆகையால் சென்ற முறை­யை­விட இம்­முறை ஐ.தே.க. வின் முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை அதி­க­ரிக்க முடி­யு­மென ஐ.தே.க. தவி­சா­ளரும் கேகாலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கபீர் ஹாசிம் தெரி­வித்தார்.இந்­நி­லையில் இதனை முறி­ய­டிப்­ப­தற்­காக ஜனா­தி­பதி தலை­மை­யி­லான அர­சாங்கம் சதித்­திட்டம் தீட்டி வரு­வதன் பய­னா­கவே முஸ்லிம் கட்­சிகள் தனித்து போட்­டி­யி­டு­வ­தா­கவும் அவர் குற்­றஞ்­சாட்­டினார்.

இது தொடர்பில் அவர்  மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்
தற்­போது நமது நாட்டில் என்றும் இல்­லாத வகையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பேரி­ன­வா­திகள் செயற்­பட்டு வரு­கின்­றனர். கோயில்கள் மாத்­தி­ர­மின்றி பள்­ளி­வா­சல்­களும் உடைக்­கப்­பட்டு வரு­கி­றது. ஹலால் மற்றும் நிக்காப் பிரச்­சினை சம­கா­லத்தில் தலை விரித்­தா­டு­கின்­றன. எனவே, தற்­போது இவ்­வ­ர­சா­னது முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக பௌத்த அமைப்­பு­களை தூண்­டி­விட்டு வேடிக்கை பார்க்­கி­றது.

இந்­நி­லையில் முஸ்­லிம்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­பட்டு தமது உரி­மைகள் பறிக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதனால் முஸ்­லிம்கள் அரசின் மீது வெறுப்­ப­டைந்து காணப்­ப­டு­கின்­றனர். அரசிலுள்ள அமைச்­சர்கள் கூட முஸ்­லிம்­க­ளுக்­காக குரல் கொடுக்க முடி­யாத துர்ப்­பாக்­கிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.

அதே­போன்று முஸ்­லிம்­களின் உரி­மை­க­ளுக்­காக ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னரே குர­லெ­ழுப்ப வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. அவ்­வாறு குர­லெ­ழுப்­பிய போதும் அர­சி­லுள்ள முஸ்லிம் அர­சில்­வா­திகள் பேச விடாமல் தடுக்கும் நிலை ஏற்­பட்­டுள்­ளமை கவ­லை­ய­ளிக்­கி­றது.
எவ்­வா­றா­யினும் முஸ்­லிம்கள் அரசின் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களை நம்­பிக்கை கொள்­ளாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. கொழும்பு வாழ் மக்கள் அர­சிற்கு வாக்­க­ளிக்­க­மாட்­டார்கள் கடந்த மத்­திய மாகாண சபை தேர்­த­லிலும் அவ்­வா­றான நிலை­மையே ஏற்­பட்­டது. அதே­போன்றே மேல் மாகாண முஸ்­லிம்கள் அர­சிற்கு வாக்­க­ளிக்­காமல் பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய தேசிய கட்­சிக்கே வாக்­க­ளிப்­பார்கள் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply