அமெரிக்காவின் தீவன ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலி

அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் இயங்கிவரும் சர்வதேசத் தீவன ஆலை ஒன்று விலங்கினங்களுக்கான தீவனங்கள், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்து பொருட்களைத் தயார் செய்து வருகின்றது. இந்த ஆலையில் நேற்று காலை திடீரென்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது.விபத்து நேர்ந்த சமயம் அங்கு 38க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் இருந்துள்ளனர். அப்போது பெரும் சப்தம் ஒன்று கேட்டதாகவும் அதனைத் தொடர்ந்து மின்சாரம் தடைப்பட்டதாகவும் கூறிய ஊழியர் ஒருவர் ஆலையின் தென்மேற்கில் தீப்பிடிக்கத் துவங்கியதாகவும் தெரிவித்தார்.

தகவல் அறிந்ததும் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து தீயை அணைக்கப் போராடியுள்ளனர். இவர்களுடன் மது, புகையிலை, வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி, தொழில் பாதுகாப்பு, சுகாதார நிர்வாகம் போன்ற பிரிவுகளின் பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டனர்.

இந்த சம்பவம் தொழில்துறை விபத்து என்று குறிப்பிடப்பட்டபோதிலும் இதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.இந்தத் தீவிபத்தில் இருவர் பலியானதாகவும், பத்து பேர் தீக்காயங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நகர மேயர் ஜீன் ஸ்டோதர்ட்டின் தகவல் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தீவன உணவுகளுக்குத் தேவையான தானியங்கள் இங்கு அரைக்கப்படுவதால் குவியும் தானியக் கழிவுகளும், தூசும் இத்தகைய தீவிபத்துகளுக்கான காரணியாக எப்போதுமே இருக்கக்கூடும் என்று தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகத்தின் இணையதளத் தகவல் தெரிவிக்கின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply