கைது செய்யப்பட்ட 25 மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு கோரிக்கை :முதலமைச்சர் ஜெயலலிதா
கைது செய்யப்பட்டுள்ள 25 மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இலங்கைக் கடற்படையினர் 25 இந்திய மீனவர்களை கைது செய்திருந்தனர். இந்த மீனவர்களை விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.இலங்கை அதிகாரிகளின் நடவடிக்கை இந்திய மீனவ சமூகத்தை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் கைது செய்யப்பட்ட 25 இந்திய மீனவர்களையும் துரித கதியில் விடுவிப்பதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply