எமது பிரச்சினையை நாமே பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் : கருணா அம்மான்
சர்வதேசம், சர்வதேசம் என்று செல்வதில் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. எமது பிரச்சினையை எமக்குள் பேசித் தீர்த்துக் கொள்வதே சிறந்த முறையாக அமையும் என மீள்குடியேற்றத்துறை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.இலங்கை கொள்கைக் கற்கைகள் நிறுவகம் தொடர்பான திருத்தச் சட்ட மூலம் குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
சர்வதேசம் என்று சொல்லிக் கொண்டு போவதில் எப்பயனும் ஏற்படப்போவதில்லை என்பதை தமிழ் அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். எமது பிரச்சினையை நாமே பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும்.
அண்மையில் இலங்கை வந்திருந்த பிரிட்டிஷ் பிரதமர் யாழ்ப்பாணம் சென்றிருந்தார். அங்கு ஒரு வீட்டைக் கூடக் கட்டுவதற்கு உதவி செய்யாத அவர் அங்குள்ள நிலைமை பற்றிக் கருத்து கூறுகின்றார். சில அரசியல்வாதிகள் அறியாமையின் காரணமாகவே சர்வதேசம் சர்வதேசம் என்று செல்கின்றனர்.
நாட்டில் நிலவும் அமைதிச் சூழலைக் குழப்பும் வகையிலேயே சில சர்வதேச நாடுகள் செயற்படுகின்றன. குறிப்பாக பிரித்தானியா, ஈராக் போன்ற நாடுகளில் கால்வைத்து அங்குள்ள நிலைமையைக் குழப்பி விட்டுள்ளது. எனினும் இலங்கையில் பயங்கரவாத முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் எவ்வித குழப்பமும் ஏற்படவில்லை. இச்சமாதான சூழலைக் குழப்பவே சிலர் முயற்சிக்கின்றனர்.இதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு இடமளிக்காது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply