இலங்கை மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றது : ஜீ.எல்.பீரிஸ்

இலங்கையின் மீது கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கை மீது அதிகளவில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.குறிப்பாக அடிக்கடி இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான தீர்மானங்கள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக் கூடுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏனெனில்இவ்வாறான நடவடிக்கைள் நல்லிணக்க முனைப்புக்களை மோசமாக பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply