கடற்கொள்ளையர்களிடம் இருந்து 11 இந்திய மாலுமிகளை காப்பாற்றிய பிரான்ஸ் கடற்படை
ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களிடம் இருந்து 11 இந்திய மாலுமிகளை பிரான்ஸ் நாட்டு கடற்படை மீட்டுள்ளது. ஓமன் கடற்பகுதியில் கடந்த 18ம் தேதி பிரான்ஸ் ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்ட போது அவர்கள் மீடப்பட்டுள்ளனர் என்று புதுடெல்லியில் உள்ள பிரான்ஸ் தூதரக தகவல்கள் தெரிவித்துள்ளன. கடற்கொள்ளையர்கள் 5 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய் கப்பலை கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்ததாக தகவல்கள் வெளியாகியது. இதனை அடுத்து ஐரோப்பிய யூனியன் கடற்படைக்கு சொந்தமான கப்பலில் சென்ற கடற்படையினர். அப்போது 11 இந்திய மாலுமிகளை கடற்கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றியுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply