அரசாங்கத்திற்காக குரல் கொடுக்க போவதில்லை : தமரா குணநாயகம்

ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் குரல் கொடுக்க போவதில்லை என ஜெனிவாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.அத்துடன் ஜெனிவா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கையின் பிரதிநிதியாக தான் கலந்து கொள்ளவுள்ளதாக வெளியான செய்திகளில் எந்த உண்மையுமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவாவுக்கான இலங்கையின் பிரதிநிதி பதவியை தனக்கு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுத்தாலும், அதனை தான் ஏற்றுக்கொள்ள போவதில்லை எனவும் இது குறித்து அரசாங்கம், தன்னுடன் கலந்துரையாடவில்லை என்றும் தமரா குணநாயகம் கூறியுள்ளார்.

ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் அரசாங்கத்திற்காக ஒரு முறை குரல் கொடுத்ததாகவும் அது இறுதியில் தனது கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியது எனவும் மீண்டும் ஒருபோதும் அரசாங்கத்திற்காக குரல் கொடுக்க போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply