நாட்டில் ஜனநாயகம்,சுதந்திரம் குழித்தோண்டி புதைக்கப்பட்டுள்ளன எதிர்கட்சித் தலைவர் ரணில் குற்றச்சாட்டு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஏகாதிபத்திய ஆட்சியானது, இந்நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்து விட்டது. மக்களுக்கு பொருத்தமே இல்லாத குடும்ப ஏகாதிபத்தியத்தைக் கவிழ்ப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி விட்டது என்று அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி ஒழிந்து விட்டதாக பண்டாரநாயக்க பரம்பரை தம்பட்டம் அடித்தது. ஆனால், அது நடைபெறவில்லை.

இன்று மஹிந்த குடும்பம் அதற்கான சதியில் இறங்கியிருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியை எவராலும் அசைத்துப் பார்க்க முடியாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கனவு துடைத்தெறியப்படும் என்றும் அவர் கூறினார். மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களைச் சந்திக்கும் விஷேட நிகழ்வு நேற்று மாலை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது.

இதில் உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது பிரதித் தலைவர் கருஜயசூரிய, தவிசாளர் காமினி ஜயவிக்கிரம பெரேரா, பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட எம்.பி.க்கள் கலந்து கொண்டிருந்தனர். இங்கு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறுகையில், இந்நாட்டை ஆட்சி செய்கின்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சிக்கு எதிராகவும் சவாலாகவும் நிற்பது ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே. அதனால், எப்படியாவது எமது கட்சியை சின்னா பின்னமாக்கிவிட வேண்டும் என்ற தோரணையில் அவர் பல சதித் திட்டங்களைத் தீட்டி வருகின்றார்.

நூற்றுக்கு மேற்பட்ட அமைச்சுக்களை கொண்டிருக்கின்ற அரசாங்கத்தில் அதன் அதிகாரங்கள் அமைச்சர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது அது தனது குடும்பத்தின் கையிலேயே பகிரப்பட்டிருக்கின்றது என்பது நாடறிந்த விடயம். இதனை வெளிப்படுத்துவது பாரிய குற்றம் என்பதால் ஊடக அடக்கு முறையும் அச்சுறுத்தல், கொலைகளும் கடத்தல்களும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தில் எழுப்பப்படுகின்ற கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சர்கள் மறுக்கின்றனர். இவ்வாறு மக்கள் ஏமாற்றும் அரசாங்கமே இன்று அதிகாரத்தில் இருக்கின்றது.

சுயாதீன ஆணைக்குழுக்களை அமைக்காது அரசியலமைப்பையே மீறச் செயற்படுகின்ற குடும்ப அரசியல் இந்நாட்டில் இருந்தே தூக்கியெறியப்பட வேண்டும். இதனையே ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்துகின்றது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க முதல் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வரையில் கூறிய ஒரே விடயம் ஐக்கிய தேசியக் கட்சி ஒழித்து விட்டது. இனி அதனால் எழ முடியாது என்பதாகும். அது நடந்ததாக இல்லை. தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரக் கம்பனியுமு“ சதித்திட்டங்களின் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சியை ஒழித்துக்கட்ட காணுகின்ற கனவு ஒருபோதும் பலிக்கப் போவதில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியயை எவராலும் அசைத்துவிட முடியாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்தை பொறுப்பெடுத்ததில் இருந்து ஏகாதிபத்திய ஆட்சியே இடம்பெற்று வருகின்றது. இதன் விளைவாக நாட்டில் ஜனநாயகம், சுதந்திரம் அனைத்தும் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டன. நாட்டின் சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்துக்கும் ஏற்றதான நல்லாட்சியை கொடுக்கும் ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சிதான். எமது தாய்நாட்டையும் மக்களையும் பாதுகாக்கவே ஐக்கிய தேசியக் கட்சி இருக்கின்றது. அரசின் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நிற்பது நாம் மட்டுமே. அதனாலேயே இந்நாட்டின் ஜனநாயகத்தை இல்லாதொழித்துள்ள ராஜபக்ஷவின் ஏகாதிபத்தியத்தியம் ஐக்கிய தேசியக் கட்சியையும் அழித்து விட நினைக்கின்றது. அந்த நினைப்புக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.

நடைபெறவிருக்கும் மேல்மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டு அரசாங்கத்தை கவிழ்க்க களத்தில் இறங்கியுள்ளது. எனவே, ஜனநாயகத்தை வெற்றிகொள்ளும் தேர்தலாக மேல்மாகாண சபைத் தேர்தலை பயன்படுத்துவோம். நாடு எதிர்பார்க்கும் நல்லாட்சியை வழங்கும் அருகதை ஐக்கிய தேசியக் கட்சியிடம் மாத்திரமே இருக்கின்றது. எனவே, மேல்மாகாண சபை அதற்கான வாய்ப்பாக அமைய வேண்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply