பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கட் அணியினர் மீது துப்பாக்கிப் பிரயோகம்: அறுவர் காயம், போட்டி ரத்து ஐந்து பொலிசார் பலி
பாகிஸ்தானில் இடம்பெற்று வரும் இரண்டாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் இன்று கலந்து கொள்வதற்காக லாகூர் கடாபி மைதானத்துக்கு இலங்கை அணியினரை ஏற்றிக் கொண்டு வந்த பஸ் மீது இனந் தெரியாதவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் அறுவர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றது. இவர்கள் பயணம் செய்து கொண்டிருந்த பஸ் மீதும் இவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கிச் சென்று கொண்டிருந்த பொலிஸார் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் ஐந்து பாகிஸ்தான் பொலிசார் கொல்லப்பட்டனர்.
காயமடைந்த இலங்கை வீரர்களில் நால்வர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். இருவருக்குத் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்படுகிறது.
இதேவேளை இந்த டெஸ்ட் போட்டியை ரத்துச் செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply