பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதலில் 7 பேர் பலி
பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் உள்ள மார்தான் என்ற இடத்தில் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அக்தர் அலி ஷா காரில் தன் அலுவலகத்துக்கு சென்றார். வழியில் அவர் கார் அருகே வந்த ஒரு தற்கொலை தீவிரவாதி தன் உடலில் கட்டிஇருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். இதில் 7 பேர் பலியானார்கள். 20 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் போலீஸ் டி.ஐ.ஜி. ஷா காயமின்றி தப்பினார்.
இதுபற்றி நிருபர்களிடம் கூறுகையில், என்னை கொல்லும் நோக்கத்துடன் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில் பலியானவர்களில் 4 பேர் போலீஸ்காரர்கள் ஆவார்கள்.
சம்பவ இடத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் தலையும், ஒரு காலும் கண்டு எடுக்கப்பட்டன. இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply