ஜனாதிபதியின் அழைப்புக் கிடைத்தவுடனே எமது கட்சி கூடி ஆராய்ந்து முடிவெடுக்கும் : தங்கேஸ்வரி கதிர்காமன்
இனப்பிரச்சினை குறித்து ஆராய்வதற்கு அரசாங்கம் அழைக்கும் பட்சத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பில் கலந்துகொள்வதா இல்லையா என்பது பற்றிக் கூடி ஆராய்ந்து தீர்மானிக்கப்படும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைப்பது தொடர்பாக அனைத்து தமிழ் கட்சிகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திவிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம அண்மையில் கூறியிருந்தார்.
எனினும், ஜனாதிபதியின் அழைப்புக் கிடைத்தவுடனேயே சந்திப்பில் கலந்துகொள்வதா இல்லையா என்பது பற்றித் தமது கட்சி கூடி ஆராய்ந்து முடிவெடுக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமன் கூறியிருப்பதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply