பயங்கரவாத அமைப்புக்களின் புகலிடமாகப் பாகிஸ்தான்: அமெரிக்கா குற்றச்சாட்டு

பிரதான பயங்கரவாத அமைப்புக்களின் புகலிடமாக பாகிஸ்தான் விளங்குவதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ரொபேர்ட் கேட்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். இது பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் பாரிய பிரச்சினையைத் தோற்றுவித்திருப்பதாக அவர் தெரிவித்தார். பாகிஸ்தானின் எல்லைப் பகுதியே இந்தப் பயங்கரவாத அமைப்புக்களின் புகலிடமாக விளங்குகின்றதெனத் தான் கருதுவதாகக் குறிப்பிட்ட ரொபேர்ட் கேட்ஸ், அல்குவைதா அமைப்பு மாத்திரமல்லாது தலிபான் அமைப்பு ஹக்னி வலையமைப்பு, குல்வுடின் ஹிக்மைற்யர் மற்றும் இவைகளுடன் இணைந்த வேறு சில பயங்கரவாதக் குழுக்;களும் செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அமைப்புக்கள் பாகிஸ்தானில் நீண்டகாலமாகப் பாதுகாக்கப்படுவதாகவும், அமெரிக்காவுக்கு இதுவொரு பிரச்சினையாக இருக்கப்போவதாகவும் கேட்ஸ் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் வொஷிங்டனில் ரொபர்ட் கேட்ஸை சந்தித்திருந்த பாக்கிஸ்தான் இராணுவ அதிகாரி ஆஸாப் பர்வேஷ் கயனி, மோதல்கள் இடம்பெறுகின்ற பகுதிகளில் தற்போது புதிய முறையில் இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.

கடந்த வாரம் வொஷிங்டனில் நடைபெற்ற சந்திப்பையடுத்து, தனது பேச்சு செவிமடுக்கப்பட்டிருப்பதாகத் தான் நம்புவதாகவும், அவர்கள் பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் பாரிய ஆபத்தை இருப்பதை தற்போது சரியாக உணர்ந்திருப்பதாகவும் ரொபேர்ட்; கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவும், கூட்டுப் படைகளும் கடமையில் ஈடுபட்டிருக்கும் வரையில் அது பயங்கரவாதிகளின் புகலிடமாக இருக்க வாய்ப்பில்லையெனவும் அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தான் அரசாங்கம் பல நாடுகளுக்கு இராணுவ ஒத்துழைப்பு மற்றும் ஏனைய உதவிகளையும் வழங்கமுடியுமெனவும் ரொபர்ட் கேட்ஸ் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply