கிளிநொச்சிக்கான மின்சார விஸ்தரிப்பு வேலைகள் ஆரம்பம்

கிளிநொச்சிக்கான மின்சார விநியோகம் விஸ்தரிப்பு வேலைத்திட்டத்துக்கு சுமார் 500 மில்லியன் ரூபா தேவையென மதிப்பிடப்படடுள்ளது. பூரணமான இணைப்புக்களை ஏற்படுத்த சுமார் ஒரு வருடகாலம் செல்லும் என மின்சார சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதேநேரத்தில் ஏ-9 வீதி வழியாக வவுனியாவிலிருந்து மாங்குளத்துக்கான மின்சார விநியோக இணைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புளியங்குளத்திலிருந்து அதிசக்தி வாய்ந்த மின்சார கேபிள்களும் கோபுரங்களும் அமைக்கப்படவுள்ளன. புளியங்குளத்திற்கும் கிளிநொச்சிக்குமிடையிலான 66 கிலோ மீற்றர் தூர நீளத்துக்கு புதிதாக கோபுரங்களும் கேபிள்களும் ஏற்படுத்தவேண்டியுள்ளன. ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இந்த வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் உப மின் நிலையம் ஏற்படுத்தப்பட்ட பின்னரே கிளிநொச்சி மாவட்டத்துக்கான முழுமையான மின்சார விநியோகம் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. அதற்கு முன்னர் தற்காலிக ஏற்பாடாக கிளிநொச்சிக்கான மின்விநியோகம் இடம்பெறவுள்ளது.

யுத்தம் காரணமாக கிளிநொச்சியில் அமைக்கப்பட்டிருந்த உப மின்நிலையம் சேதமடைந்தது. பழைய இடத்திலேயே மீளவும் செயற்படுத்த மின்சார சபையினர் திட்டமிட்டுள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்களை மீளவும் குடியமர்த்த முன்னர் மக்களுக்குரிய மின்சாரம், வீதிகள், குடிநீர் போன்ற அவசியமான அனைத்து வேலைத் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது என மீள்குடியேற்ற அமைச்சு தெரிவிக்கின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply