இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி கண்டனம்

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.தீவிரவாதிகளின் முக்கிய நிலையமாக பாகிஸ்தான் திகழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானில் இடம்பெற்று வரும் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச விளையாட்டு வீரர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை அமெரிக்கா வன்மையாகக் கண்டிப்பதாக ஒபாமா தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply