பிளவுபடும் புலிகளின் தலைமைகள்
புதுகுடியிருப்பு வீழ்ச்சிக்குப் பின் புலிகளின் மேல்மட்ட இராணுவத் தலைமைகள் தமக்குள் தீவிரமாக முரண்படுவதாக களமுனைச் செய்திகள் தெரிவிக்கிறன. புதுகுடியிருப்பில் நிலைகொண்டிருந்த சொர்ணம், பானு, ஆதித்தியன், சித்திராங்கன் தலைமையிலான குழுக்கள் அண்மையில் இராணுவத்திடம் ஏற்பட்ட தோல்வியால் ஏற்பட்ட பிரதேச இழப்புக்கு ஆளையாள் மாறி குற்றஞ்சாட்டி வருவதாக அவர்களில் தொடர்பாடல்களை ஒட்டுக்கேட்ட இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.
வரும் வாரங்களில் புலிகளின் இராணுவத் தலைமைகள் மேலும் மோசமான தோல்விகளைச் சந்திக்கும் போது அவர்களுக்கிடையிலான பிளவுகள் பாரிய முரண்பாடுகளாக வெடிக்குமென எதிர்பார்த்தே சில சர்வதேச நாடுகள் ’’முல்லைத்தீவில் சிக்குண்டு உள்ள மக்களை வெளியேற்ற’’ தமது மனிதாபிமான மீட்டுப்பணிக்கு ஆயுத்தமாகி வருவதாக இலங்கை படைத்துறை ஆய்வாளர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.
புதுகுடியிருப்பு சந்தியை மீட்ட செயலணி – VIII தொடர்ந்தும் வடகிழக்காக மேலும் முன்னேறி வருவதாக இராணுவம் அறிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply