பழிதீர்க்கும் வகையிலேயே புலம்பெயர் அமைப்புக்களுக்குத் தடைவிதிப்பு : சுமந்திரன்

இலங்கை அரசாங்கம் தடைசெய்துள்ள அமைப்புக்களில் சிலவற்றையே நாம் அறிவோம். அவர்கள் இலங்கையில் நிலையான அரசியல் தீர்வும் சமாதானமும் ஏற்பட வேண்டும் என்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள். அவ்வாறான அமைப்புக்களையும் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவை என்று ஒரு தலைபட்சமாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அண்மையில் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு பழிதீர்க்கும் வகையிலேயே இந்த நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்பட வேண்டும். தமிழ் மக்கள் அச்சமின்றி அமைதியாக வாழ வேண்டும். அதற்கான தீர்வு திட்டத்தை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமானதும் இதயசுத்தியுடனுமான முறையான வேலைத்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என கடந்த காலங்களில் புலம்பெயர் அமைப்புக்கள் பலவும் சர்வதேச நாடுகளும் வலியுறுத்தி வந்தன.

இனப்பிரச்சினை தீர்வு விடயம் தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் மேற்கொண்டுவரும் செயற்பாடுகளுக்கு ஆதரவாக சில புலம்பெயர் அமைப்புக்கள் செயற்பட்டனர். அவர்கள் பயங்கரவாதத்தை ஏற்படுத்தவோ அல்லது ஊக்குவிக்கவோ முயற்சிக்கவில்லை. நிலையான சமாதானமும் ஏற்பட வேண்டும் என்றே வலியுறுத்தினார்கள். அவ்வாறான அமைப்புகளையும் அரசாங்கம் தடைசெய்துள்ளது.

அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளானது அரசியல் தீர்வு மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றுக்கு தடையாகவே அமையும் என்பதெ உண்மை. நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஏற்பட வேண்டுமென்று எவரும் விரும்பமாட்டார்கள். அது அரசாங்கம் கூறும் பொய்யான தகவலாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply