பாக். பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் மசோதா நிறைவேறியது
பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கு வகை செய்யும் வகையில் சர்ச்சைக்குரிய பாதுகாப்பு மசோதா, அந்நாட்டு பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு மட்டுமல்லாது, ஆளும் நவாஸ் ஷெரீப்பின் ஆதரவு கட்சிகள் ஜாமியாத்–இ–உலமா இஸ்லாம்–எப் கட்சிகளடன் மற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. இம்மசோதா எந்தவொரு தீவிரவாத செயலையும் தடுப்பதற்கு பாதுகாப்பு படையினர் பலப்பிரயோகம் செய்ய வழி வகுக்கிறது. தீவிரவாதிகளால் உயிர் இழப்பு, காயம் ஏற்படலாம் அல்லது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டாலே, பாதுகாப்பு படையினர் துப்பாக்கியைப் பயன்படுத்த இந்த சட்டம் அனுமதி அளிப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கிற அனைத்து தரப்பினரையும் தேசத்தின் பகைவர்கள் என்று இந்த மசோதா வர்ணிப்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply