அதிகாரப்பகிர்வு தீர்வாக அமையப்போவதில்லை; வாசுவின் கருத்தை முற்றாக எதிர்க்கும் ஜே.வி.பி.

அதிகாரப்பகிர்வு ஒரு போதும் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையப்போவதில்லை. மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் வழங்குவதனால் பிரிவினை வாதமே தூண்டப்படும். அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் கருத்தை முற்றாக எதிர்ப்பதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. நாட்டில் மூவின மக்களுக்கான உரிமைகளை பறித்து விட்டு ஜனநாயகம் பற்றி அரசாங்கம் பேசுவது வேடிக்கையாக உள்ளது. மனித உரிமை மீறல்களின் விளைவினை அரசாங்கம் இப்போது அனுபவிப்பதாகவும் சுட்டிக்காட்டியது. அதிகாரப்பகிர்வே நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு என்ற அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின்  கருத்து தொடர்பில் வினவிய போதே மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வின் மூலமான தீர்வினை ஒரு போதும் ஏற்படுத்த முடியாது. அதிகாரப்பகிர்வு பிரச்சினைகளை மேலும் வளர்க்க  பிரிவினையினையே தூண்டும். வட மாகாண சபை இன்று தமது உரிமைகளையும் தமக்கான அதிகாரங்களையும் கோரி வருவதாலேயே நாட்டில் தமிழ் சிங்கள பிரிவினை வாதம் அதிகரித்துள்ளது. தமிழர்கள் தமக்கென ஓர் ஆட்சியினையும் முஸ்லிம்கள் அவர்களுக்கென்றொரு ஆட்சியினையும் சிங்களவர்கள் தமது அரசாங்கத்தினையும் உருவாக்கினால் இலங்கையின் நிலை எவ்வாறு அமையும். மூவின மக்களும் மோதிக் கொண்டு நாட்டையே சீரழிக்கும் யோசனையினையே அமைச்சர் வாசுதேவ நாணயக்கார முன்வைக்கின்றார். இவ்வாறான முட்டாள் தனமான சிந்தனைகளை நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply